2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

2011 இலக்கிய நூல் பரிசுத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 11 படைப்பாளிகள் தெரிவு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 2011 ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை பிரசுரமான இலக்கியப் படைப்புக்களில் இலக்கியப் பரிசில் திட்டத்தின் கீழ் சிறந்தவையாக 11 நூல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

11 நூலாசிரியர்களின் பெயர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் டி.டிபிள்யு.டி.வெலிக்கலவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

காவியம், கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், ஆய்வு, விமர்சனம் மற்றும் பல்துறை ஆகிய துறைகளில் வெளியான படைப்புக்களிலிருந்தே இந்நூல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இலக்கிய நூற்பரிசுக்கு தெரிவு செய்யபட்ட நூல்களின் பெயர்களும் அவற்றின் நூலாசிரியர்களின் பெயர்களும் வருமாறு:-

ஜின்னா ஷரிபுத்தீன் ( வாத்தியார் மாப்பிள்ளை), ஏ.தாரிக் (மகாராணி) பி.ரி.அஸீஸ் (சிறுவர் பால்கள்), ஆர்.எம் நௌசாத் (வெள்ளிவிரல்), திருமதி சுதாகரி மணிவண்ணன் (பிற்நத நாள் பரிசு), விமல் குழந்தைவேல் (கசகறணம்), ச.அருளானந்தம் (உதவும் உள்ளங்கள்), சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் (ஈழத்து நவீன ஓவியம்), எம்.எம்.எம்.நூறுல்ஹக் (அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்), நா.நவநாயகமூர்த்தி( பழந்தமிழர் நடுகற்பண்பாடு) , எம்.சி.எம்.செரிப் (சுவடுகள்).

11 நூலாசிரியர்களுக்குமான இலக்கிய நூல் பரிசுகள் 18.10.2012 பிற்பகல் திருகோணமலை விவேகானந்தாக் கலலூரியில் நடைபெறிவிருக்கும் 2012ஆம் ஆண்டுக்கான மாகாண கலை இலக்கிய விழாவில் வைத்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .