2021 ஜனவரி 20, புதன்கிழமை

'முஸ்லிம்களின் மத்தியில் குடி வழிமுறை' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

கலாபூஷணம் எஸ்.அப்துல் றாஸீக் எழுதிய 'முஸ்லிம்களின் மத்தியில் குடி வழிமுறை' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை குடிமரைக்கார் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எல்.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சுர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலின் சமர்ப்பணவுரை நூலாசிரியர் எஸ்.அப்துல் றாஸீக்கும் ஆய்வுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாவும் நூலின் ஆற்றினர்.

நூலின் முதற்பிரதியை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .