2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஆலய உற்சவத்தினையொட்டி கூத்து அரங்கேற்றம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் ஆற்றுகை நிகழ்வொன்றை நடாத்தப்பட்டு வருகின்றது.

கடந்த மூன்று வருடங்களாக இவ் ஆலயத்தில் இந் நிகழ்வை நடாத்தும் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறையினர் இவ் ஆண்டும் கடந்த 1 ஆம் திகதி முதல் ஆற்றுகை நிகழ்வையும் அரங்க காட்சி கூடத்தினையும் நடாத்தி வருகின்றனர்.

இந்நிகழ்வு நாளை நிறைவு பெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக கலைகலாசாhர பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராசா, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிறேம்குமார், கிழக்கப் பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன், ஆலய வண்ணக்கரும் தலைவருமாகிய க.அகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X