2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

இராட்சத இராட்டினப் பாதை...

A.P.Mathan   / 2011 ஜூன் 22 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பானில் புதிதாக திறக்கப்படவுள்ள உலகின் மிக்பெரும் வசதிகளைக்கொண்ட பூங்காவில் இராட்சத இராட்டினப் பாதையொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 121 பாகையில் 43 மீற்றர் வீழ்ச்சியைக் கொண்ட புதிய இராட்டினமான (Roller-coaster) இது உலகின் ஆகக்கூடிய குத்துச்சாய்வைக் கொண்ட இராட்டினமாக அமையவுள்ளது.

பியூஜி-கியூ ஹைலன்ட் (Fuji-Q Highland) மகிழ்ச்சிப் பூங்காவில் இந்த புதியவகை இராட்டினம் எதிர்வரும் ஜூலை 11ஆம் திகதி தொழிற்படத் தொடங்கவுள்ளது. இந்த இராட்டினமானது 'ரக்காபிஷா' (ஆதிக்கம்) என்னும் பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 1 கிலோமீற்றர் ஓடு பாதையும் ஏழு பிரதான முடக்குகளும் வயிற்றை கலக்கும் குத்துச் சரிவான வீழ்ச்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த இராட்டினத்தில் பயணிப்பவர்கள் மணிக்கு 150 கிலோமீற்றர் என்னும் வேகத்தில் பயணிப்பர். இதனால், இப்பூங்காவிற்கு அருகிலுள்ள பியூஜி மலையை 112 செக்கன்கள் மாத்திரமே காணமுடியும். இந்த இராட்டினம் குத்துச்சரிவில் விழும்போது நிறையில்லாத அனுபவத்தை ஒரு கணம் அனுபவிப்பர்.

இங்கிலாந்தில் 2 வருடங்களுக்கு முன்னர் வடக்கு யோக்ஷெயரில் அமைக்கப்பட்ட மம்போ ஜம்போ (Mumbo Jumbo) என்னும் இராட்டினமே உலகில் தற்போது முதல் நிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .