2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

அஜீத்தின் அடுத்தத் திரைப்படம் யாருடன்?

George   / 2017 மே 18 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

“விவேகம்” திரைப்படத்துக்குப் பிறகு அஜீத்தின் அடுத்தத் திரைப்படம் குறித்த பரபரப்பில் அவரது இரசிகர்கள் தீவிரமாக உள்ளனர்.

அதன்படி அஜீத், அவரது அடுத்தத் திரைப்படத்தில் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக மீண்டும் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அந்தத் திரைப்படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அஜீத் தற்போது “விவேகம்” திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட இருப்பதாகவும், தனது அடுத்தத் திரைப்படம் குறித்து அவர் இன்னமும் யோசிக்கவில்லை என்று அஜீத்துக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, அஜீத் தனது அடுத்தத் திரைப்படத்தில் “பில்லா”, “ஆரம்பம்” உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை தந்த விஷ்ணுவர்தன் உடன் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

சோழர் கால கதையை மையமாக வைத்து எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியுள்ள புதிய கதையை விஷ்ணுவர்தன் இயக்க இருக்கிறாராம். அந்தத் திரைப்படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .