2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

அஜீத்தின் விநாயகர் இரகசியம்

George   / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தல என்று இரசிகர்களாக அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜீத் குமாரின் வெற்றியின் இரகசியத்துக்கு விநாயகர்தான் காரணம் என்பது, கோலிவூட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயமாகும். 

1996ஆம் ஆண்டு வான்மதி திரைப்படத்தில், பிள்ளையார் பட்டி ஹீரோ... பாடலும், 1999ஆம் ஆண்டு அமர்க்களம் திரைப்படத்தில், காலம் கலி காலம் ஆகி போச்சுடா... பாடலும் இடம் பெற்றன. 

அந்த வரிசையில், வேதாளம் திரைப்படத்தில், வீர விநாயகா... பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படங்கள் அனைத்தும், அஜீத்தின் சினிமாத் துறைக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளதை மறுக்கமுடியாது.

மேலும், மங்காத்தா திரைப்படத்தில் அஜீத் பெயர் விநாயக். வீரம் திரைப்படத்திலும் அவருக் விநாயகம் என்றே பெயர் வைத்திருந்தனர். 

தற்போது, வேதாளம் திரைப்படத்தில், அஜீத் பெயர் கணேஷ். இப்படி, ஒட்டு மொத்தமாக, அஜீத்தின் வெற்றிக்கான காரணம் விநாயகர் என்பதை கண்டு பிடித்துள்ளது கோலிவூட்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .