2021 ஜனவரி 20, புதன்கிழமை

அம்மா - அப்பா பிரிவால் மகிழ்ச்சியடைந்த ஸ்ருதி

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். மைக்கேல் கோர்சல் என்ற வெளிநாட்டு நபருடன் காதல் வயப்பட்டதால் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. 

பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட முறிவால் தற்போது மீண்டும் முழு வீச்சாக சினிமாவில் களமிறங்கி, விஜய் சேதுபதி உடன் லாபம் படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், அவர், தன்னுடைய அப்பாவும் நடிகருமான கமல் குறித்து நிறைய பேசியிருக்கிறார். 

“என்னையும்; சகோதரி அக்ஷராவையும் அப்பா என்ற முறையில் நடிகர் கமல் கொஞ்சியது கிடையாது. அந்த ஏக்கம் எங்கள் இருவருக்கும் வெகு காலமாக உண்டு. அப்பா பெரிய நடிகர் என்பது எனக்கு சிறு வயதில் தெரியாது. 

ஒரு நாள் புலி வேடத்தில் வருவார்; அடுத்த நாள் பெண் வேடத்தில் வருவார்; வேறொரு நாள் இந்தியன் தாத்தா வேடத்தில் வருவார். அதையெல்லாம் பார்க்க பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு முறை, என்னுடைய அப்பாவுக்கு ஒரு விபத்து நடந்து விட்டது. அதை அவருடைய மேனேஜர் தான் தெரிவித்தார். அப்பா பிழைத்து வருவது கடினம் என்றும் சொன்னார். 

அந்த விபத்தில் இருந்து என்னுடைய அப்பா மீண்டு வந்தார். அவர் தான் ஹீரோன்னு நினைச்சேன். நினைத்த மாதிரியே, அவர் மீண்டு வந்தார். அந்த அளவுக்கு அப்பாவுக்குவில் பவர் உண்டு. எல்லா விஷயங்களிலும் அப்பா என்னோட கருத்தையும் கேட்பார்.

என்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கு சண்டை வந்து இருவரும் பிரிந்தனர். வருத்தமாக இருந்தது. ஆனால், தினந்தோறும் சண்டையிட்டு, வீட்டுக்குள் கலவரமாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. 

வீட்டுக்குள் சண்டையிட்டுக் கொண்டு வாழ்வதைக் காட்டிலும் அவரவர் தனித்தனியாக பிரிந்து வாழ்வதில் தவறில்லை என முடிவெடுத்தேன். அதனால், இந்தப் பிரச்னையில் இருவருக்கும் சமாதானம் செய்யலாம் என்ற என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.

மற்றவர்களுக்கெல்லாம் இந்த விடயம் ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால், வீட்டில் இருப்பவர்களுக்குத்தான், இது எவ்வளவு வேதனையான விடயம் என்பது தெரியும். எப்படியோ, அம்மாவும் - அப்பாவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். பிரிவும் கூட பல நேரங்களில் சந்தோஷமாகத்தான் இருக்கும்” என்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .