Editorial / 2020 மார்ச் 12 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல நடிகை தெரிவித்திருந்த பாலியல் புகார், இப்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது.
நடிகை சுர்வீன் சாவ்லாவும் தானும் இந்தப் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாகப் பேட்டி ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.
ஹிந்தி நடிகையான இவர், தமிழில் வசந்த் இயக்கிய, மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தான் எதிர்கொண்ட பாலியல் தொல்லைப் பற்றி கூறும்போது, சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு நன்றாகச் சென்றாலும் தென்னிந்திய சினிமாவுக்குப் போனதும் இதுபோன்ற பயங்கரமான அனுபவங்களை எதிர்கொண்டேன்.
ஒரு இயக்குனர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவர் என் உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அனுபவிக்க விரும்புவதாகச் சொன்னார். இதே போல மூன்று அனுபவங்களைச் சந்தித்தேன். அதிர்ச்சி அடைந்தேன்
தேசிய விருது பெற்ற மற்றொரு இயக்குனர் ஒருவரும் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அண்மையில் பாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, இதுபோன்ற மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன்.
ஒரு இயக்குநர், என் அந்தரங்க பாகங்களை பார்க்க விரும்புவதாகச் சொன்னார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். என் தன்னம்பிக்கை காரணமாக இதில் இருந்து நான் வெளியேறி வந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.
அப்போது இப்படி அவர் கொடுத்த பேட்டி, இப்போது மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது.
6 minute ago
10 minute ago
11 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
11 minute ago
16 minute ago