2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

எதிர்ப்பார்ப்பை எகிறவைக்கும் ’தரங்கம்’ முதற்பார்வை

George   / 2017 மே 29 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷின் “வொண்டர்பார்” நிறுவனம் தயாரிக்கும்  “தரங்கம்” என்ற மலையாள திரைப்படத்தின் முதற்பார்வை போஸ்டர், தனுஷின் சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியாகியுள்ளது.

தனுஷ் தயாரிக்கும் முதல் மலையாள திரைப்படமான “தரங்கம்”  முதற்பார்வை போஸ்டரில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு, புகைப்படங்களுடன் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரே இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக கேரள திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

டொமினிக் அருண் இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் டொவினோ தோமஸ் நடிக்கின்றார். இவர் ஏற்கெனவே பிரபல பெண் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கவுள்ள தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X