2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஒரே நாளில் வைரலாகிய 'ஹெலனா' டீசர்

Princiya Dixci   / 2016 ஜூலை 18 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரிஸ் ஜெயராஜ்-இன் தோல்வி முகத்தை விரைவில் வெளிவர இருக்கும் 'இருமுகன்' மாற்றி விடும் போலிருக்கிறது.

சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட 'இருமுகன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஹெலனா...' பாடல் டீசர் ஒரே இரவில் யூ-டியூபில் 2 இலட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

விக்ரம், நயன்தாரா இருவரின் நெருக்கமான நடிப்பில், அற்புதமான ஒளிப்பதிவில் அருமையான லொகேஷனில் இந்த 25 விநாடி பாடலே ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது என்றால், முழுமையான பாடல் வந்த பிறகு ரசிகர்களை நிச்சயம் கவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹரிஸ் ஜெயராஜ் ஒரு காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்பட்டவர்.

இசைக் கோர்வைகளினால் அதிகம் ரசிக்கப்பட்ட அவருடைய பாடல்கள் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்குப் போரடித்தன.

அவருடைய பாடல்களை அவரே கொப்பியடித்ததால் வந்த விளைவு அது. கடந்த சில வருடங்களாக ஹரிஸ் ஜெயராஜால் பெரிய ஹிட்டுகளையும் கொடுக்க முடியவில்லை. „துப்பாக்கி... திரைப்படத்துக்குப்பிறகு ஹரிஸ் பெரிய ஹிட்டுகள் எதையும் கொடுக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களில் வெறும் 9 திரைப்படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்துள்ளார்.

'இருமுகன்' திரைப்படம் மூலம் ஹரிஸ் மீண்டும் எழுந்து வரட்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .