2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

கடுப்பாகும் ஸ்ருதி

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், ஹந்தியில் லக் என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படத்திலேயே நீச்சல் உடையில் நடித்து பொலிவூட் ரசிகர்களை சுண்டியிழுத்தார். அதனால் அதையடுத்து கமர்சியல் படங்களாக, ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என பரவலாக நடித்தார். அத்தோடு சில தெலுங்கு படங்களில் அவரது கிளாமர் எல்லை அதிகம் இருப்பதால் மகளிர் அமைப்புக்களும் அவருக்கு எதிராக கொடி பிடித்தன.

சமீபத்தில் ஒரு பேட்டியில், 'நீங்கள் கவர்ச்சியில் எல்லை தாண்டுகின்றீர்களே? என்று ஸ்ருதிஹாசனை நோக்கி கேள்வி பாய்ந்த போது, செம கடுப்பாகி விட்டார் ஸ்ருதி.

'நான் எந்த படத்திலும் அதிக கிளாமரை வெளிப்படுத்தியதில்லை. எனது உடலமைப்பே கிளாமராக உள்ளதால், நான் சிறிதளவு கிளாமரை வெளிப்படுத்தினாலும் அது ஓவராக தெரிகின்றது. பார்ப்பவர்களின் கண்களுக்கு அதிகம் தெரிந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய கவர்ச்சி எல்லை எதுவரை என்பது எனக்கு நன்றாக தெரியும். அதை நான் ஒருபோதும் தாண்டியதில்லை' என்று மிகவும் ஹாட்டாக பதிலளித்துள்ளார் ஸ்ருதி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .