George / 2016 ஜூலை 21 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

லிங்கா திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பீட்டை சரி செய்யும்வரை கபாலி திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவையில் இருந்து செயல்படும் சுக்ரா நிறுவனத்தைச் சேர்ந்த மகாபிரபு என்பவர் புதன்கிழமை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
லிங்கா திரைப்படத்தை வாங்கி வெளியிட்டதில் தனக்கு 80 இலட்சம் இந்திய ரூபாய் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கான இழப்பீட்டை பல முறை கோரியும் தனக்கு வழங்கப்படவில்லையென்றும் மகாபிரபு கூறியிருந்தார்.
தனக்கு இழப்பீடு வழங்கப்படாமல் கபாலி திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என தனது மனுவில் மகாபிரபு கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினி, தயாரிப்பாளர் தாணு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் அளித்த பதில் மனுவில், லிங்கா திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இந்த திரைப்படத்துக்கும் தொடர்பு இல்லை. ஆகவே, கபாலி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி சுந்தரேஷ், கபாலி திரைப்படத்தை நாளை திரையிட தடையில்லையெனத் தீர்ப்பளித்தார்.
லிங்கா திரைப்பட இழப்பீடு தொடர்பான வழக்கை தனியாக நடத்தலாம் என்றும் நீதிபதி கூறினார்.
16 minute ago
24 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
25 minute ago
1 hours ago