2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

குத்தாட்டம் போடும் ஸ்ரேயா

George   / 2016 மே 30 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழை திரைப்படத்தில் கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்டபடி தமிழ் சினமாவுக்குள் நுழைந்தவர்தான் நடிகை ஸ்ரேயா. 

நாயகியாக நடித்தபோதும் பாடல் காட்சிகளில் குத்தாட்ட நடிகைகள் ரேஞ்சுக்கு ஆட்டம் போட்ட ஸ்ரேயாவுக்கு, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் திரைப்படத்தில் வடிவேலுவுடன் ஆடிய ஐயிட்டம் பாடலே பின்னர் அவரது மார்க்கெட்டுக்கும் வேட்டு வைத்தது.

அதன்பிறகு, விக்ரமுடன் ராஜபாட்டையில் லட்டு லட்டு ரெண்டு லட்டு என்று குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா, தெலுங்கு, ஹிந்தியிலும் ஐயிட்டம் பாடல்களில் ஆடிவந்தார். பின்னர் தோழா திரைப்படத்தில் நடித்த ஸ்ரேயாவுக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 100ஆவது திரைப்படத்திலும் இன்னொரு நாயகி வேடம் கிடைத்துள்ளது. 

ஆரம்பகாலத்தில் இருந்தே குத்துப்பாட்டுக்கு ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஸ்ரேயா, தனது அபிமான இயக்குநர்களை தொடர்பு கொண்டு, நல்ல கதாபாத்திரம்  மற்றும் ஐயிட்டம் பாடல்களில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று படவேட்டையில் ஈடுபட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .