2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

காற்று வெளியிடையில் புது நடிகை

George   / 2016 ஜூலை 10 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தில் அழகான புது நடிகை அறிமுகமாகின்றார்.

பவன்குமார் நடிப்பில் கன்னடத்தில் அண்மையில் வெளியான யூ-டேர்ன் திரைப்படத்தில் அறிமுகமான சாரதா ஸ்ரீநாத், என்ற நடிகையே காற்று வெளியிடையில் அறிமுகமாகின்றார்.

கார்த்தி - அதிதி ராவ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதுடன் பிரபலமான ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

இதேவேளை, கௌதம் ராம்சரண் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் தமிழ் திரைப்படத்திலும் சாரதா ஸ்ரீநாத், ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .