2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

செய்தி தெரியுமா?: ’செம்பா’ அம்மா ஆகப் போகிறாராம்

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆலியா மானஸா. அவர் அதே தொடரில் தனக்கு கணவராக நடித்த சின்னய்யா அதாங்க சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

தற்போது சஞ்சீவால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் அவர் விரைவில் அப்பா ஆகப் போகிறார். ஆமாங்க, நம்ம செம்பா கர்ப்பமாக இருக்கிறாராம்.

ஆலியா மானஸா கர்ப்பமாக இருப்பதை சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தானும், ஆலியாவும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆம், பாப்பு கர்ப்பமாக உள்ளார். உங்களின் ஆசியும், அன்பும் தேவை என்று கூறியுள்ளார். 

சஞ்சீவின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆலியாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், சீரியல் போன்று அழ வைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

விரைவில் குட்டி ராஜாவோ, ராணியோ யாராக இருந்தாலும் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று ரசிர்கள் கூறியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .