2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சுசிலா கின்னஸ் சாதனை

George   / 2016 மார்ச் 29 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் அதிக பாடல் பாடியமைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் கான சரஸ்வதியான பி.சுசீலா. 1935ஆம் ஆண்டு, நவம்பர் 13ஆம் திகதி, ஆந்திராவில் பிறந்தவர் பி.சுசீலா. 

சிறு வயதிலேயே இசை மீது தீராத காதல் கொண்ட சுசீலா முறையாக இசைப்பயிற்சி பயின்றார். ஆரம்பகாலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் பாடி வந்தார் சுசீலா. 1950ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பெண்டயாலா நாகேஸ்வர ராவ், புதுமுக பாடகி ஒருவரை தேடி வந்தார். 

அப்போது ஆல் இந்தியா ரேடியோ சார்பில் சுசீலா உள்ளிட்ட 5பேர் பரிந்துரைக்கப்பட்டார்கள். அதில் பி.சுசீலா தேர்வானார்.
1952ஆம் ஆண்டு தமிழில் வெளியான பெற்ற தாய் என்ற திரைப்படத்தில் எதற்கு அழைத்தாய்... என்ற பாடலை முதன்முதலாக பாடினார். அப்போது ஆரம்பித்த சுசீலாவின் பாட்டு பயணம் சுமார் 30 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடினார். இதுவரை அவர் சுமார் 40 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். சினிமா பாடல் மட்டுமல்லாது ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார் சுசீலா.

இந்நிலையில், 1960 தொடங்கி 2016 வரை, தனியாக 17,965 பாடல்கள் பாடிய பின்னணி பாடகி என்ற சாதனைக்காக, இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இதற்கான சான்றை கின்னஸ் அமைப்பு, பி.சுசீலாவிடம் இடம் பிடித்திருக்கிறது.

சுசீலா, இதுவரை தமிழில் இரண்டு முறை மற்றும் தெலுங்கில் 4 முறை என மொத்தம் 6 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். இதுதவிர தமிழக, கேரள, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
கான சரஸ்வதி பி.சுசீலாவின் மணிமகுடத்தில் மற்றுமொரு சாதனை மகுடம் இந்த கின்னஸ் சாதனை.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .