George / 2016 ஜூலை 29 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனுஷ் நேற்று (28) தனது பிறந்த நாளை கொண்டாடினார். தனது வீட்டில், வடசென்னை திரைப்பட குழுவினருடனும், தனது குடும்பத்தினருடனும் தனுஷ் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், நேரில் வந்து தனுஷுக்கு வாழ்த்து கூறி, ஆசீர்வதித்தார்.
சுமார் 3 மணி நேரம் ரஜினி அங்கு இருந்தார். இது தனுஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக இருந்தது. தனுஷ் பிறந்த நாளுக்கு ரஜினி நேரில் வந்து வாழ்த்துவதும், அதிக நேரம் இருப்பதும் இதுவே முதல் முறையாகும்.
வடசென்னை திரைப்படக் குழுவினருடனும் ரஜினி பேசி மகிழ்ந்ததுடன், நிழற்படம் எடுத்துக் கொண்டார். தனுஷ் பெற்றோர்களும் வந்து அவரை வாழ்த்தினர்.
13 minute ago
19 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
24 minute ago