2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தமன்னாவின் புது ஹீரோ

George   / 2017 மே 29 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில், “யாருடா மகேஷ், மாநகரம்” ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடித்தசந்தீப் கிஷன், தற்போது “மாயவன், அறம் செய்து பழகு” ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

தெலுங்கு, ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன், அடுத்ததாக  ஹிந்தித் திரைப்படங்களை  இயக்கிய குணால் கோஹ்லி இயக்கும் புதிய தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் ரொமான்டிக் கதைகளில் நடித்துள்ள சந்தீப் கிஷனை, இந்தத் திரைப்படத்தில் அதிரடி எக்ஷன் ஹீரோவாக்குகிறாராம் குணால் கோஹ்லி. இந்நிலையில், நாயகியாக தமன்னா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தற்போது “ஸ்கெட்ச், கொலையுதிர்காலம்”ஹிந்தி பதிப்பில் நடித்து வரும் தமன்னா, தொடர்ந்து இந்தத் திரைப்படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக இலண்டனில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .