Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 27 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரி, தங்கமகன் திரைப்படங்களை அடுத்து பிரபு சொலமனின் தொடரி திரைப்படத்தில் நடித்து வந்தார் தனுஷ். முழுக்கதையும் ரயிலுக்குள் நடக்கும் இந்தத் திரைப்படத்தில் காதலே பிரதானமாக இருந்தபோதும், ரயில் பயணத்தின்போது நடுக்காட்டில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது பயணிகளிடம் திருட்டு கும்பல் மற்றும், தீவிர வாதிகளின் பிடியில் இருந்து மீட்கும் நாயகனாக நடித்துள்ளார்.
அதோடு, இந்த ரயில் டெல்லியில் இருந்து சென்னை செல்வதற்குள் கீர்த்தி சுரேஷை லவ் பண்ணிக் காட்டுவதாகவும் நண்பர்களிடம் சவால் விடுவாராம் தனுஷ்.
அதேபோல், ரயில் சென்னை வந்ததும் தனது காதலை கீர்த்தி சுரேஷ் தனுஷிடம் சொல்வாராம். அதேபோல் தீவிரவாதிகளிடமிருந்து ரயில் பயணிகளை காப் பாற்றியதற்காக ரயில்வே நிலையத்தில் தனுஷுக்கு விருது கொடுக்கப்படுமாம்.
இப்படியொரு கதையில் உருவாகியிருக்கும் தொடரி திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறன.
மேலும், தற்போது தனுஷ் தயாரித்து வரும் அம்மா கணக்கு திரைப்படம் ஏப்ரல் 22 ஆம் திகதி திரைக்கு வருகிறதாம். அதையடுத்து மே மாதம் இறுதியில் தொடரி திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago