2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

தாடி வளர்க்கும் தனுஷ்

George   / 2016 ஜூலை 10 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுசாக ஏதாவது செய்தால்தான் பிழைக்க முடியும் என்றாகி விட்டது தமிழ் சினிமாவில் நடிகர்களின் நிலைமை. 

அதனால், வழக்கம்போல் ரொமான்ஸ், நகைச்சுவை என்று வந்து செல்வதெல்லாம் வேலைக்கு ஆகாது என்பதால் ஆர்யா போன்ற நடிகர்களே காட்டுவாசியாகிக் கொண்டிருக்கிறார்கள். 

'இருமுகன்'  திரைப்படத்துக்காக அரவாணியாக நடிக்கிறார் விக்ரம். 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் சிம்பு, ஒரு கெட்டப்பில தாடி வளர்த்து நடிக்கிறார். 

இந்த நிலையில், தனுஷும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார். 'தொடரி' திரைப்படத்தை அடுத்து 'கொடி' திரைப்படத்தில் வேஷ்டி, கதர் சட்டை அணிந்து அரசியல்வாதி ஆகியிருப்பவர், கௌதம்மேனனின் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வில் ஸ்டைலிசாக மாறி நடித்து வருகிறார்.

ஆனால், இந்த திரைப்படத்தில் நடித்து வரும்போதே வெற்றிமாறனின் 'வடசென்னை'க்காகவும் தயாராகிறார்.  முழுக்க முழுக்க வடசென்னையில் நடக்கும் அந்த கதையில் தாடி கெட்டப்பில் நடிக்கிறாராம் தனுஷ். 

அதனால் கௌதம்மேனன் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்து விட்டவர், இப்போது 'வடசென்னை'க்காக தாடி வளர்த்தபடி தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .