George / 2016 ஜூலை 11 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

த்ரிஷா நடித்து வரும்நா யகி எனும் திகில் திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக நடிகை இலியானா கூறியுள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை இலியானா, தற்போது திரைப்பட வாய்ப்புகள் இன்றி திருமணத்துக்கு தயாராகி வருகின்றார். த்ரிஷாவும் இலியானாவும் சமகாலத்தில் தெலுங்கு திரை உலகில் வளர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நல்ல தோழிகளாகவும் பழகி வருகின்றனர்.
திகில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு பயப்படும் இலியானா, நாயகி திரைப்படத்தை விரும்பக் காரணம் அத்திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் தானாம். நாயகி திரைப்படத்தின் ட்ரைலர் குறித்து இலியான கூறுகையில், 'நாயகி திரைப்படத்தின் ட்ரைலரில் திகிலூட்டும் வகையில் த்ரிஷா மிரட்டியுள்ளார்' என குறிப்பிட்டுள்ளார்.
த்ரிஷா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் நாயகி என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்படம் ஜூலை 15ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago