2021 மே 06, வியாழக்கிழமை

’பேட்மேன்’ உயிரிழந்தார்

George   / 2017 ஜூன் 11 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

1960களில் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் நடித்து பிரபலமான ஆடம் வெஸ்ட் (வயது 88), இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1966-இல் படமாக்கப்பட்ட தொலைகாட்சி தொடரில் பேட்மேன் கதாபாத்திரத்தை ஆடம் வெஸ்ட் ஏற்று நடித்தார். பேட்மேன் கதாபாத்திரம் ஆடம் வெஸ்ட்-ஐ புகழின் உச்சத்துக்கு அழைத்து சென்றது. எனினும் இந்த கதாபாத்திரம் இவரை வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஒத்துழைக்கவில்லை.

வாஷிங்டன் நகரின் வல்லா வல்லாவில் 1928 ஆம் ஆண்டு பிறந்த ஆடம் வெஸ்ட் இயற்பெயர் வில்லியம் வெஸ்ட் ஆண்டர்சன் ஆகும்.

நடிப்பு துறையில் கால் பதிக்க தனது பெயரை மாற்றிக் கொண்டார். ஆடம் வெஸ்ட் தனது மனைவி மார்கெல், ஆறு குழந்தைகள், ஐந்து பேரன், பேத்திகள் மற்றும் இரண்டு பெரிய பேரப்பிளைகளுடன் வசித்து வந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .