2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பணக்காரனாக்கி பிச்சைக்காரன்

George   / 2016 மார்ச் 27 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசையமைப்பாளரான விஜய் அன்டனி ஆர்வக்கோளாறில் நடிகர் அவதாரம் எடுத்துவிட்டு மிகப்பெரிய நஷ்டத்துள்ளாகி வந்தார். அவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமான நான் நல்ல திரைப்படம் என்று பெயர் வாங்கிய அளவுக்குய வசூலில் பெரிய வெற்றியடையவில்லை. 

அதன் பிறகு நடித்த சலீம் திரைப்படமும் நல்ல திரைப்படம் என்ற பெயரை தான் பெற்றது. மூன்றாவதாக நடித்த இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் தோல்வியடைந்து பணமும் நஷ்டமானது.

இந்நிலையில், விஜய்ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. சுமார் 3 கோடிக்கு வாங்கப்பட்ட பிச்சைக்காரன் திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 13 கோடி வசூல் செய்துள்ளது. 

எம்.ஜி. என்ற மினிமம் கியாரண்டி அடிப்படையில்தான் பிச்சைக்காரன் திரைப்படத்தை விற்றுள்ளார் விஜய் அன்;டனி. அந்த வகையில் இதுவரை அவருக்கு 5 கோடிக்கு மேல் கூடுதலாக இலாபம் வந்தடைந்திருக்கிறது. மொத்தத்தில் பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் அன்டனியை பணக்காரன் ஆக்கிவிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .