2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

’மீ டூ’ ஏமாற்றத்தில் ராதிகா ஆப்தே

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், ஹிந்தி மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான ராதிகா ஆப்தே, எதிர்பார்த்தது எதுவுமே நடக்கல என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். 

ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். 

பரபரப்பாக கிளம்பிய 'மீ டூ' பாலியல் புகார்கள் ஒன்றுமே இல்லாமல் போனதில் ராதிகா ஆப்தே விரக்தி அடைந்துள்ளார். 

அண்மையில் மும்பையில் நடந்த விழா ஒன்றில், ''மீ டூ இயக்கம் கிளம்பியதும், சந்தோஷப்பட்டேன். நிறைய பேர்களோட முகமூடி கிழியும். பலருக்கும் தண்டனை கிடைக்கும்னு எல்லாம் எதிர்பார்த்தேன். 

ஆனா, அப்படி எதுவுமே நடக்கல. பொலிவுட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 'மீ டூ' இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது’என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .