2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளை தமிழச்சி

George   / 2015 நவம்பர் 17 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழக்கு வந்த நடிகை எமி ஜெக்ஷன், இப்போது மதாராச பட்டினத்திலேய வீடு வாங்கி தங்குகிற அளவுக்கு பிசியாகி விட்டார். 

ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்துள்ளது. பிரபுதேவா இயக்கிய சிங் இஸ் பிளிங் என்ற ஹிந்தித் திரைப்படத்தில் நடித்த எமி,  இனி தமிழ் பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். 

ஆனால், அந்தத் திரைப்படம் காலைவாரியதால் மீண்டும் தமிழுக்கே வந்த எமி, இனி தமிழை விட்டு போவதாக இல்லை என்று கங்கணம் கட்டிகொண்டு திரிகின்றாராம்.

2016 டிசெம்பர் வரை அவருக்கு தமிழ்த் திரைப்படங்கள் நடிக்க கோல்சீட் கொடுத்துள்ள எமி, வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தங்கமகன் மற்றும் உதயநிதி தயாரித்து நடிக்கும் கெத்து ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டார்.

அடுத்து விஜய் நடிக்க அட்லி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வரும் எமி,  ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோருடைய திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுமட்டுமின்றி எந்திரன் 2 திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
ஆகவே, வெள்ளை தமிழச்சி  இனி சென்னைவாசிதான்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X