2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

எந்திரன் மீது பொறாமைப்படும் சிரஞ்சீவி

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியல் வாழ்வினை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துவிடலாம் போலிருக்கிறது. இந்த வயதிலும் ரஜனி டூயட் பாடுவதை பார்க்கின்றபோது எனக்கு பொறாமையாக இருக்கிறது என முன்னணி நடிகர் சிரஞ்சீவி எந்திரன் இசை வெளியீட்டில் கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் 3000 திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ள எந்திரன் திரைப்படம் பல மொழிகளிலும் உருவாகியிருக்கிறது. எந்திரனின் தெலுங்கு பாடல்கள் வெளியீடு அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து பேசுகையில்…

நான் மோகன்பாபு மற்றும் ரஜனி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். மூவருமே அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தோம். ஒவ்வொருவராக அரசியலில் நுழைய முடிவுசெய்தோம். மோகப்பாபு முன்னதாக அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் நான் நுழைந்தேன். அரசியலில் நுழைந்ததும் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் ரஜனியை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராயுடன் எந்திரனின் டூயட் பாடுகிறார். பார்க்கின்றபோது எனக்கு பொறாமையாக இருக்கிறது. மீண்டும் நடிக்க வந்துவிடலாம் போலிருக்கிறது.

பொறாமை என்று சொன்னது சக கலைஞனாகவே. ஆனால் அண்ணன் ரஜனி எது செய்தாலும் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தும் சகோதரன் நான் என மேலும் குறிப்பிட்டார் சிரஞ்சீவி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--