2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வருகிறான் ஆட்டநாயகன்…

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'சின்னத்தம்பி'யாக அறிமுகமாகி 'தொட்டால் பூ மலரும்', 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' என்ற அழகான காதல் படங்களின் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் ஷக்தியின் அடுத்த படம் 'ஆட்டநாயகன்'. கிருஷ்ணராமின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி திரைக்குவரவிருக்கிறது.

இயக்குநர் வாசுவின் மகனாக இருந்தபோதிலும் எந்தவித பந்தாவும் காட்டாத நடிகர் என்ற பெயரினை தக்கவைத்துள்ள ஷக்தி, ஆட்டநாயகன் திரைப்படம் பற்றி குறிப்பிடுகையில்… ''நல்ல நேரத்தில் ஆட்டநாயகன் வெளிவரவிருக்கிறது. தொடர்ந்து காதல் படங்களை ரசித்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயமாக வித்தியாசமான ஓர் அனுபவத்தைத் தரும் என்பது மட்டும் உறுதி.

ஆதித்யா, ரம்யா நம்பீசன் ஆகியோர் மிகவும் ஒத்துழைப்பாக நடித்துள்ளனர். அவர்களின் நடிப்பினை நிச்சயமாக ரசிகர்கள் பாராட்டுவார்கள். அதேபோல் நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. முழுக்க முழுக்க அதிரடி – நகைச்சுவை நிறைந்த படமாக ஆட்டநாயகன் இருப்பான்...'' என்று குறிப்பிட்டார்.

அனுபவசாலியான இயக்குநர் கிருஷணராமின் படம் என்பதால் ஆட்டநாயகனுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ரசிகர்களை மகிழ்விக்க செப்டெம்பர் 3ஆம் திகதி ஆட்டநாயகன் திரைக்கு வருகிறான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .