A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகிலிருந்து ஹிந்திக்குபோய் சாதிக்கலாம் என தம்பட்டம் அடித்தவர்கள் எவரும் முன்னுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில்தான் ஹிந்தி படவாய்ப்பிற்காக தமிழ் திரையுலகினையே பகைத்துக்கொண்டார் அசின். சல்மான் கானுடன் ‘ரெடி’ என்ற படத்தில் தற்சமயம் நடித்துவருகிறார். இந்த ஹிந்திப் படத்தினைத் தொடர்ந்து காக்க காக்க படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதாக பல இடங்களில் அசின் குறிப்பிட்டு வந்தார்.
விபுல் ஷாவின் தயாரிப்பில் உருவாகும் 'காக்க காக்க' ஹிந்தி படத்தின் நாயகன் ஜோன் அப்ரஹாம். உத்தியோகபூர்வமாக இவர்கள் அசின்தான் நாயகி என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், ஏற்கனவே ஜோன் அப்ரஹாமுடன் நடித்திருந்த ஜெனிலியா அணுகவேண்டி விதத்தில் அணுகி புதிய நாயகியாகிவிட்டதில் அசின் கடுப்பாகியிருக்கிறாராம். ஜோன் அப்ரஹாமை தனிமையில் சந்தித்த ஜெனிலியா தன்னுடைய ‘ஒத்துழைப்பு’ பற்றி தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒத்துழைப்பில் மயங்கிய ஜோன் அப்ரஹாமும் உடனேயே தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்து 'காக்க காக்க' ஹிந்திப் படத்தின் ரீமேக்கில் கதாநாயகியாக நடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
அசினின் உற்ற நண்பரான தயாரிப்பாளர் விபுல் ஷா, தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்ற ஆதங்கத்தில் அசின் புலம்பித் திரிகிறாராம். அதுமட்டுமல்லாமல் தனக்கு ஆப்பு வைத்த ஜெனிலியாதான் தனக்கு தற்போதைய எதிரி என்பதுபோலும் நடந்துகொள்கிறாராம்.


17 minute ago
22 minute ago
38 minute ago
uwais Sunday, 22 August 2010 01:53 AM
ஒன்றும் தெரியாத பாப்பா வெச்சாளாம் பெரிய ஆப்பா.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
38 minute ago