Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கு தேசத்தின் பிரபல இயக்குனர் அப்துல்லாவின் புதிய நாயகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் கவர்ச்சிப் புயல் நமீதா. அப்துல்லாவின் இயக்கத்தில் தயாராகவுள்ள புதிய தெலுங்கு திரைப்படமான "ஃபயர்"க்கு நமீதாவையே கதாநாயகியாக அவர் தெரிவுசெய்துள்ளார்.
ஆக்ஷனும், கவர்ச்சியும் கலந்த அதிரடி மசாலாப் படமாக உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில் நமீதாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்படவுள்ளதாகவும் இதுவரை பார்த்திராத நமீதாவை இதில் காண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ளதாகவும் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு ஹாங்கொங்கிலும், அவுஸ்திரேலியாவிலும் நடைபெறவுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த ஃபயர் திரைப்படத்தில் மேலும் ஒரு கதாநாயகி இருப்பதுடன் இரு கதாநாயகர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் நமீதாவுக்கே முக்கியத்துவம் அதிகம் என்கிறார் அப்துல்லா.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago