2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கமலை நிம்மதியாக தூங்கவைத்த மைனா

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எல்லோரும் என்னுடைய படங்களை புகழ்கின்றனர். ஆனால் என்னுடைய படங்களில் சிலவற்றை பார்த்துவிட்டு தூங்கமுடியாமல் தவிக்கின்ற பலரை கண்டிருக்கிறேன். இதற்கிடையில் ‘மைனா’ படத்தினை பார்த்த பின், நிம்மதியாக என்னால் தூங்கமுடிந்தது என ‘மைனா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நேற்று வியாழக்கிழமை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

'கொக்கி', 'லீ', 'லாடம்' என வித்தியாசமான படங்களை திரையுலகிற்கு தந்திருந்த பிரபு சொலமன் இயக்கியிருக்கும் புதிய படம்தான் ‘மைனா’. இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்துகொண்ட கமல்ஹாசனே தனது உரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்…

பிரமாண்டமான படங்களை விட மக்கள் மத்தியில் நல்ல கதையம்சமுள்ள படங்கள் எளிதில் இடம்பிடித்துவிடுகின்றன. நகரத்து காதல்கதைகளை கண்டு ரசித்த ரசிகர்களுக்கு ‘மைனா’ வித்தியாசமான ஓர் அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. கிராமத்து காதல் ஜோடி ஒன்று அவர்களது காதலை வெற்றிகொள்ள எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள் என்பதே கதை. அதை அருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரபு சொலமன்… என்று மனமுருக குறிப்பிட்டார் கமல்ஹாசன்.

பலரது எதிர்பார்ப்பினையும் தூண்டிவிட்டுள்ள ‘மைனா’ திரைப்படம் வெகுவிரைவில் திரைக்குவரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--