A.P.Mathan / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபலங்கள் பல கலந்துகொண்ட ‘மைனா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் கதாநாயகி அனகா கலந்துகொள்ளவில்லை. எல்லோராலும் புகழ்ந்து பேசப்படுகின்ற ஒரு பாத்திரத்தில் கலக்கியிருக்கும் அனகா, ஏன் இப்படி இசை வெளியீட்டு விழாவினை புறக்கணித்தார் என்பது புதிராகவே இருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் பிரபு சொலமன் தான் அனகாவை நிகழ்வில் கலந்துகொள்ள வரவேண்டாம் என கட்டளையிட்டதாகவும் தகவல் கசிந்திருக்கிறது. இதற்குக் காரணம் அனகா நடித்துள்ள 'சிந்துசமவெளி' படம்தான் என கூறப்படுகிறது. சிந்துசமவெளி படத்தில் மாமனாருடன் நெருங்கிப்பழகும் பாத்திரத்தில் அனகா நடித்துள்ளதால், அனகா மீது பெரும் சர்ச்சை அலையொன்னை திருப்பிவிட்டிருக்கிறார்கள் திரையுலகினர். இந்த எதிர்ப்பலை ‘மைனா’ படத்தினையும் பாதிக்குமென்று அஞ்சிய இயக்குநர் பிரபு சொலமன் முன்கூட்டியே உசாரடைந்துவிட்டார். அதனால்தான் ‘மைனா’ படத்தின் முக்கிய நிகழ்வுகளில் அனகாவை தவிர்த்துவருவதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.
இதேவேளை 'மைனா' படத்தின் இசைவெளியீட்டில் ஏன் கலந்துகொள்ளவில்லை என அனகாவிடம் கேட்டால்… ‘பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்ததால் நிகழ்வில் கலந்துகொள்ளமுடியவில்லை. நீங்கள் நினைப்பதுபொல் வேறெதுவும் பிரச்சினை இல்லை…’ என தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார் நிருபர்களிடம்.
நெருப்பில்லாமல் புகை வருமா? என்பது சர்ச்சையான கேள்வியாக இருப்பினும் இவ்விடத்தில் அந்தக் கேள்வி அனகாவுக்கு சாலப்பொருந்தும்…


7 minute ago
36 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
38 minute ago
46 minute ago