Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
"தென்னிந்தியக் கலைஞர்களே இலங்கையின் சினிமாத்துறை வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தவர்கள். பின்னர் அதன் நிலைமை மாறியதன் காரணமாக சினிமாத்துறை இன்று வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. அன்று போல் தமிழ், முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பு இருக்குமாயின் இன்று சிங்கள சினிமாவும் கொடி கட்டிப் பறக்கும்" என பிரபல திரைப் படத்தயாரிப்பாளரும் நெறியாளருமான பத்மஸ்ரீ கொடிகார கூறினார்.
இலங்கையின் பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான காமினி பொன்சேகாவின் நினைவு தின நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கண்டி கெப்பெட்டிபொல மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"பின்னணிப் பாடல், இசையமைப்பு, நெறியாள்கை, தயாரிப்பு, கெமரா, ஒளி ஒலி அமைப்பு, மேக்கப் இப்படி அனைத்து துறையிலும் தென்னிந்தியக் கலைஞர்களே வழிகாட்டினர்.
அதனை விட தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் அதிக பங்களிப்பு செய்தனர். மஸ்தான், சாஹிப், மொஹிதீன் பேக், கோபால், ருக்மணி தேவி, சாமி, ஏ.ஜே.கரீம், எம்.ஏ.கபூர், ஏ.எம்.ராஜா ஜிக்கி, பத்மின் இராகினி, அஞ்சலி தேவி என பல பட்டியல்கள் உள்ளன.
அன்று எம்.ஜி.ஆர். உடன் சம நிலையில் இருந்த கலைஞர் தான் காமினி பொன்சேகா. ஆனால் எம்.ஜி.இராமச்சந்திரன் சாதித்தவைகளை காமினியால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
காரணம், தமிழ் சினிமாவின் வளர்ச்சி வேறு. சிங்கள சினிமாவிற்கு நேர்ந்த கதி வேறு. அதேபோல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த அரசியல் பலம் காமினிக்கு கிடைக்கவில்லை.
இன்று சிங்கள சினிமா தனிச் சிங்கள் மயமானதாலே அது முன்னேற முடியவில்லை. அன்று போல் தமிழ், முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பு இருக்குமாயின் இன்று சிங்கள சினிமாவும் கொடி கட்டிப் பறக்கும் என்றார் அவர்.
இவ்வைபவத்தின் போது கலைத்றைக்கும் சமூகத்துக்கும் தொண்டாற்றிய தமிழ் சிங்கள, முஸ்லிம் பலர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
22 minute ago
30 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
48 minute ago
1 hours ago