2021 மார்ச் 06, சனிக்கிழமை

கவர்ச்சியை வெறுக்கும் நமீதா!

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரபு நாட்டு குதிரை என்று எல்லோராலும் வர்ணிக்கப்படுகின்ற கவர்ச்சி புயல் நமீதாவுக்கு இப்பொழுது கவர்ச்சி அலுத்துவிட்டதாம்.

''தொடர்ந்து கவர்ச்சி காட்டி நடித்து நடித்து எனக்கு அலுத்து விட்டது. ஆகையினால் இனிமேல் கவர்ச்சியாக படங்களில் நடிக்க விரும்பவில்லை. குடும்பப்பாங்கான பாத்திரங்களிலேயே நடிக்க விரும்புகிறேன். தமிழில் மட்டுமல்ல எந்த மொழிக்கு சென்றாலும் எனக்கு கவர்ச்சியான பாத்திரங்களைத்தான் தருகிறார்கள். இது எனக்கு வெறுத்துப் போய்விட்டது. ஆகையினால் தற்காலிகமாக கவர்ச்சிக்கு ஓய்வு கொடுக்கப் போகிறேன்...'' என கவர்ச்சி புயல் நமீதா பெரும் குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் ரசிகர்களின் கனவில்.

கன்னட படமொன்றில் குடும்ப பாங்கான பாத்திரமொன்றில் நமீதா நடிக்கிறாராம். அதே படத்தில் அக்ஷன் காட்சிகளும் இருக்கிறதாம். இந்த பாத்திரம் பிடித்துப் போய்விட்டதால்தான் நமீதாவுக்கு கவர்ச்சி வெறுத்துவிட்டதாம். பாவம் நமீதா ரசிகர்களின் கனவு..!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .