2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்டகார பாவனா...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாவனா என்று நினைத்தாலே அவரது தெத்தி பல்லும் அழகிய குழந்தைத்தனமான சிரிப்பும்தான் ஞாபகம் வரும். அந்தளவுக்கு தமிழ்பட ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றவர் பாவனா.

ஒருசில நடிகைகளுக்குத்தான் அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கின்ற சந்தர்ப்பம் கிடைக்கும். அந்தவகையில் பாவனா அதிர்ஷ்டகாரிதான். தெலுங்கு, கன்னடா, மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் அதிகம் பேசப்படுகிறவர் நடிகை பாவனா.

அண்மையில் கன்னட மொழியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'ஜக்கி'. இப்படத்தில் புனீத் ராஜ்குமாருடன் ஜோடியாக பாவனா நடித்திருக்கிறார். அழகிய கதையம்சமுள்ள இப்படம் இன்றைய நிலைவரப்படி சூப்பர் டூப்பராக ஓடிக்கொண்டிருக்கிற கன்னட படம் என்கிறார்கள். இந்த செய்தியால் உச்சத்தில் இருக்கிறார் பாவனா.

'கன்னட மொழியில் நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இந்நிலையில்தான் என்னை புனீச் ராஜ்குமார் அணுகினார். அவரினால் இன்று நான் புகழில் உச்சியை அடைந்திருக்கிறேன். நிச்சயமாக நல்ல கதையம்சமுள்ள படங்களை தேடி நடிக்க தயாராக இருக்கிறேன்...' என்று நடிகை பாவனா வெற்றிக் களிப்பில் கருத்துக் கூறியிருக்கிறார்.

அதிர்ஷ்டகார பாவனா, ஆபத்தில்லாமல் வெற்றிப்படி ஏறினால் நல்லம்தான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .