2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

லட்சுமி ராயின் கவர்ச்சி 'மங்காத்தா'

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஜீத் - திரிஷா நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'மங்காத்தா' இதில் கவர்சியான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லட்சுமி ராய்.

திரையுலகுக்கு வந்தது முதல் தற்போது வரையில் கவர்ச்சியுடன் ஒட்டி நடித்தவர் லட்சுமி ராய். இருப்பினும் தென்னிந்திய திரையுலகில் அவருக்கு அவ்வளவாக பெயர் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் அஜீத்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நினைத்து பூரிப்படைந்துள்ளாராம் லட்சுமி ராய்.

மங்காத்தாவில் திரிஷாதான் கதாநாயகியாக நடிக்கிறார். இருப்பினும் லட்சுமி ராய்க்கு முக்கிய கதாபாத்திரமொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக வெங்கட் பிரபுவுக்கு நன்றி சொல்லி வருகிறார் லட்சுமி ராய்.

இதேவேளை, இந்தப் படத்தில் லட்சுமி ராய்க்கு சிறப்பான கவர்ச்சிக் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ரசிகர்களுக்கு இது அட்டகாசமான விருந்தாக அமையும் என்று கூறும் மங்காத்தா குழுவினர், இந்தப் படத்திற்குப் பின்னர் லட்சுமி ராய் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், மங்காத்தா திரைப்படமும் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். அஜீத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா போட்டுள்ள அறிமுகப் பாடலைக் கேட்டு அஜீத்தே அசந்து விட்டாராம். இப்படி கொலிவூட்டில் ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மங்காத்தாவை மிகக் கவனமாக செதுக்கிக் கொண்டிருக்கிறாராம் வெங்கட் பிரபு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .