2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

தமன்னாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய காலத்தில் அதிகம் பேசப்படுகின்ற நடிகை என்றால் அது தமன்னாதான் என்று சின்னப் பிள்ளையும் சொல்லிவிடும். சின்னப்பிள்ளை போன்ற சிரிப்பும் அழகும் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது.

பறந்து பறந்து நடித்துவரும் தமன்னாவுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி பிறந்தநாள். இம்முறை பிறந்ததினத்தை தன்னுடைய வீட்டில் கொண்டாடாமல் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

நடிகர் தனுஷுடன் 'வேங்கை' படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில் வீட்டில் பிறந்தநாளை கொண்டாட விரும்பாமல் படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்திருக்கும் தமன்னா, தன்னுடைய தந்தை, சகோதரனை காரைக்குடிக்கு வரவழைக்க முடிவு செய்திருக்கிறாராம். தாய் அவருடனேயே இருப்பதால் சந்தோஷம் என்கிறார்.

ஏன் இந்த ஏற்பாடு என்று கேட்டதற்கு... 'எனக்கு கமெரா முன் நிற்பதுதான் பிடித்திருக்கிறது. ஆகையினால் என்னுடைய பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாட விரும்புகிறேன்' என்று கூறியிருக்கிறார் நடிகை தமன்னா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--