2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

தமிழ் திரைக்கு பெருமை சேர்த்த எந்திரன்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலப் பிரபலமான திரைப்படத்துறை இணையதளமான ஐ.எம்.டி.பி.யின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் முதல் 50 படங்களுக்குள் இடம்பிடித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம்.

இது தமிழில் வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெருமையாகும். ஐ.எம்.டி.பி என்பது ந்ஹாலிவூட்டின் பைபிள் என்று போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியான படங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகிறது இந்தத் தளம். பார்வையாளர்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஐ.எம்.டி.பி.யின் முதல் 50 திரைப்படங்களின் வரிசையில் இந்தியாவிலிருந்து 7 திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில் எந்திரனுக்கு 39ஆவது இடம் கிடைத்துள்ளது.

தமிழில் எந்திரன் என்ற தலைப்பில் நேரடிப் படமாகவும் தெலுங்கு மற்றும் இந்தியில் ரோபோ என மொழிமாற்றுப் படமாகவும் உலகம் முழுவதும் வெளியான எந்திரன் வசூலில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

75 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் எந்திரனுக்கு இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையும் உள்ளது. அதே போல வெளிநாடுகளில் அதிக வசூல் செய்ய திரைப்படமும் எந்திரன்தான். சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இதுவரை ரூ.380 கோடிகள் வசூலித்துள்ளது எந்திரன்.

படத்தின் உருவாக்கம், தரம் மற்றும் ரஜினியின் மிகச் சிறந்த நடிப்பை சர்வதேச திரைக் கலைஞர்கள் பாராட்டினர். ஒஸ்கார் விருது பெற்ற ந்ஹாலிவுட் இயக்குநர் ஒலிவர் ஸ்டோன், எந்திரன் ஒரு புதுமையான படம் என்றும் தான் மிகவும் ரசித்துப் பார்த்த படம் இதுவென்றும் புகழ்ந்துள்ளார்.

இத்தனை சிறப்புகளுக்கும் சிகரம் வைப்பது போல் இப்போது ஐ.எம்.டி.பி.யின் உலகப்பட பட்டியலிலும் எந்திரன் இடம்பிடித்துள்ளது. இந்தப்பட்டியலில் கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் திரைப்படம் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Sooriyan Wednesday, 15 December 2010 06:38 PM

    ஷங்கருக்கு ஒரு ஓ போடலாம் .......................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .