2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

களியாட்ட விடுதியில் ஜெனிலியா டான்ஸ்...

Menaka Mookandi   / 2011 மார்ச் 01 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரவு களியாட்ட விடுதிகளில் நடனமாடி அபலைப் பெண்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறாராம் ஜெனிலியா. வேலாயுதம், உருமி தவிர்ந்த தெலுங்கு - இந்திப் படங்களிலும் பிஸியாக இருந்தாலும் தனக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தன்னால் முடிந்த சேவையையும் செய்கிறாராம் ஜெனிலியா.இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், 'ஆதரவற்ற பெண்களுக்கும், கஷ்டப்படுகிற பெண்களுக்கும் உதவி செய்கிற அமைப்பு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நைட் கிளப்பில் ஒரு நாள் முழுவதும் இருக்க முடிவு செய்துள்ளேன். அங்கு வருபவர்களை வரவேற்பேன், கலந்துரையாடவும் செய்வேன். இது போன்ற சமூக சேவை பணிகளில் எனக்கு ஈடுபாடு உண்டு.கொடுமைகள், கஷ்டங்களை எதிர்த்து போராடும் பலம் பெண்களிடம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவு கொடுத்தால் அந்த பெண்ணின் குடும்பமே நன்றாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். அதனால்தான் என்னால் முடிந்த இந்த உதவியைச் செய்கிறேன்', என்கிறார் ஜெனிலியா.


  Comments - 0

 • saja Monday, 09 May 2011 04:52 PM

  well done genelia.
  it is a good work

  Reply : 0       0

  kaja Sunday, 10 April 2011 09:45 PM

  சூப்பர் ஜெனிலியா

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--