2021 மே 10, திங்கட்கிழமை

தீபாவளி ரேஸில் மோதும் நட்சத்திரங்கள்...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 01 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் 26ஆம் திகதி, உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இம்முறை தீபாவளித் திருநாளை ஒரு சவால்மிக்க திருநாளகக் கருதி களத்தில் குதிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் எமது சினிமா நட்சத்திரங்கள்.

இம்முறை தீபாவளித் திருநாள் சினிமா ரேஸில் யார் களமிறங்கவுள்ளார்கள் என்று பார்க்கிறிர்களா? வேறு யார்? விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7-ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன? மற்றும் சிம்புவின் ஒஸ்தி ஆகிய திரைப்படங்களே இம்முறை தீபாவளி வெளியீடுகளாக திரையிடப்படவுள்ளன. இவற்றுக்கான சினிமாத் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.

கடந்த 2007ஆம் ஆண்டு தீபாவளி ரேஸில், இதே போல் விஜய்யின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல், தனுசின் பொல்லாதவன் ஆகிய திரைப்படங்கள் மோதிக்கொண்டன. ஆனால், அப்போது இருந்ததை விட இப்போது இந்த மூன்று நடிகர்களின் அந்தஸ்துகளும் உயர்ந்துள்ளன. வியாபாரமும் உலக அளவில் விரிவடைந்துள்ளது. எனவே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. சீனாவில் தற்காப்பு கலையை அறிமுகம் செய்த போதி தர்மர் என்ற தமிழரை பற்றிய கதையே இப்படம்.

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஜெனிலியா என இரு ஜோடிகள் கிராமத்தில் பிறந்த சாதாரண இளைஞன் படிப்படியாக உயர்ந்து தலைவனாவதே கதை. ராஜா இயக்கியுள்ளார்.


மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடி ரிச்சா. செல்வராகவன் இயக்கியுள்ளார். இது அடுத்த தலைமுறை கதை என்று சுருக்கமாக சொல்கிறார் செல்வராகவன். ஏற்கனவே தனுஸுக்காக செல்வராகவன் உருவாக்கிய டாக்டர்ஸ் என்ற படம்தான் இது என்கிறார்கள்.

அடுத்தது, சிம்புவின் ஒஸ்தி. தரணி இயக்கியுள்ள இந்தப் படம், இந்தியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற தபாங்கின் தழுவல் ஆகும். இவற்றைத் தவிர, மேலும் சில படங்களும் கடைசி நேரத்தில் வெளியாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0

 • Rashid Wednesday, 19 October 2011 07:23 PM

  யாரு என்ன சொன்னாலும் தளபதி தானே maas.

  Reply : 0       0

  AJMAL FROM THMABALA Tuesday, 25 October 2011 09:03 PM

  தளபதிட படமெல்லாம் புஸ்வானம்......... அப்புறம் எப்படி?????????..... சும்மா சொல்லக்கூடாது தல அஜித்..... சுப்பர் ஹிட் மங்காத்தா. தீபாவளி ஹீரோ....... ஆகவே இது தல தீபாவளி ............

  Reply : 0       0

  rifan Friday, 21 October 2011 12:43 AM

  always vijay is the best.

  Reply : 0       0

  RIZWI Tuesday, 01 November 2011 03:27 PM

  சிம்பு தான் பெஸ்ட். இந்த தீபாவளி மட்டும் அல்ல எப்பவும் பெஸ்ட் ஹீரோ சிம்பு.

  Reply : 0       0

  rys111222 Sunday, 02 October 2011 06:03 PM

  ஏதே அதிலும் போட்டிதான் .....

  Reply : 0       0

  sajith Monday, 24 October 2011 07:45 PM

  தீபாவளி ஹீரோ சூரியாதான்.

  Reply : 0       0

  nafris Saturday, 22 October 2011 05:34 AM

  தளபதிதான் இந்த தீபாவளி ஹீரோ.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X