2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

விஜய்யின் இடத்தை பிடித்தார் கார்த்தி

Kogilavani   / 2013 ஜூலை 24 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


மங்காத்தா வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் 'பிரியாணி. இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. இது அவருக்கு 100-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

பிரியாணி படத்தை வரும் செப்டம்பர் 6ஆம் திகதி வெளியிட முடிவு செய்துள்ளனர். பிரியாணி படத்தின் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றதை தொடர்ந்து பிரியாணி படமும் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரியாணி படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, முதலில் படத்தின் ஹீரோவாக விஜயை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்கவில்லையாம். அவருக்கு அடுத்து, கார்த்திக்கு தான் ஹீரோ கதாபாத்திரம் சரியாக பொருந்தும் என முடிவெடுத்த வெங்கட் பிரபு, கார்த்தியை படத்தின் ஹீரோவாக்கினார். இதனால், விஜய்க்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்துள்ளது.
  Comments - 0

  • Saji Thursday, 25 July 2013 09:30 AM

    விஜய்யின் இடத்தை பிடித்தார் கார்த்தி என்பது பிழையானது. விஜய்க்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்துள்ளது என்பதே சரி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .