2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இழுத்தடிக்கிறார் ஹன்சிகா...!

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிம்பு நடிக்கும் வாலு படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் ஹன்சிகா என தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.

அஜீத்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உட்பட பல படங்களை தயாரித்தவர், நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, வாலு என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார்.

இந்த படத்தின் கதாநாயகன் சிம்பு. கதாநாயகி ஹன்சிகா. விஜய் சந்தர் இயக்கி  வருகிறார். படத்தின் பாடல் காட்சி தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

வாலு படப்பிடிப்பின்போது தான் சிம்பு - ஹன்சிகா காதலிக்க ஆரம்பித்தனர். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர்.

இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஆனால் இந்தக் காதல் வளர்ந்த வேகத்திலேயே முறிந்தும் போனது. இருவரும் பிரிந்துவிட்டதாக தனித்தனியாக அறிக்கையும் கொடுத்துவிட்டனர்.

இந்த நிலையில், வாலு படத்தை தயாரித்து வரும் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, ஹன்சிகா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

அதில், வாலு படத்துக்காக ஹன்சிகாவுக்கு ரூ.70 இலட்சம் சம்பளம் பேசப்பட்டு, அதில் ரூ.55 லட்சத்தை கொடுத்து விட்டேன். பாடல் காட்சியை படமாக்கி முடித்ததும் மீதி ரூ.15 லட்சத்தை தந்து விடுகிறேன் என்று கூறினேன்.

ஹன்சிகா, வாலு படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரால் மே அல்லது ஜூன் மாதம்தான் கால்ஷீட் தர முடியும் என்று கூறுகிறார்.

அவ்வளவு நாட்கள் தாமதமானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே ஹன்சிகாவின் கால்ஷீட்டை உடனடியாக பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  Comments - 0

  • a.sathananthan Monday, 14 April 2014 01:05 PM

    நடிகை சவிதிரியின் கதை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--