2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நயன்தாரா மீது நடவடிக்கை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐதராபாத்தில் நடந்த அனாமிகா தெலுங்கு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளததால் நயன்தாரா மீது படக்குழுவினர் கோபத்தில் உள்ளனர்.

இந்த விழாவில் தவறாது பங்கேற்கும்படி நயன்தாராவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் அழைப்பு விடுத்த நிலையில் விழாவுக்கு நயன்தாரா போகாமல் புறக்கணித்துவிட்டார்.

நயன்தாராவின் இந்த செயல் தயாரிப்பாளருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள வித்யாபாலன்  'கஹானி' பட விழாக்களில் பங்கேற்று படத்தை விளம்பரம்படுத்தி உள்ளார்.

ஆனால் நயன்தாரா வராமல் தவிர்த்தது தவறு என பட குழுவினர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--