George / 2015 ஜனவரி 31 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவரது புதுப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், பி.வாசு, லிங்குசாமி ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என கூறப்பட்டது.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. எந்திரன் 2ஆம் பாகத்தில் இவர்கள் இணையப் போவதாக தகவல் பரவி உள்ளது.
ரஜினி திரைப்படங்களில் எந்திரன் மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்து இருந்தார்.
ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படம் ரூ.375 கோடி வசூலித்து சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது. ஹிந்தி, தெலுங்கிலும் வெளியாகி ரூ.45 கோடி வசூலித்தது.
இந்த திரைப்படத்தின் 2ஆம் பாகத்தை நிச்சயம் எடுப்பேன் என்று ஷங்கர் ஏற்கனவே கூறி இருந்தார்.
அதற்கான கதையையும் தயார் செய்துள்ளார். சமீபத்தில் ரஜினியும், ஷங்கரும் சந்தித்து பேசி 'எந்திரன் 2ஆம் பாகம்' கதை பற்றி விவாதித்து உள்ளனர்.
எனவே இந்த திரைப்படத்தில் ரஜினி நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
33 minute ago
50 minute ago
57 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
50 minute ago
57 minute ago
3 hours ago