2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மார்ச்சில் வருகிறான் உத்தமவில்லன்

George   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் முதலாம் திகதி உத்தமவில்லன் திரைப்படத்தின்  இசை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


இதைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி இந்த திரைப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


உத்தமவில்லன் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 


இந்த திரைப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர்  இந்ததிரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல் வெளியீட்டை தொடர்ந்து விரைவில் திரைப்படத்தை வெளியிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .