2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

லட்சுமிக்கு பிடிக்காத வட்டம்

George   / 2015 ஜூலை 27 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று என்னைச்சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்ள விரும்பவில்லை என நடிகை  லட்சுமிமேனன் கூறியுள்ளார்.

'எனது தாய்மொழியான மலையாள சினிமாவில்; ஒரு திரைப்படத்தில் கதாநாயகி என்றால், இன்னொரு திரைப்படத்தில் தங்கையாக நடிப்பார்கள். மற்றொரு திரைப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிப்பார்கள். அதனால் நானும் அப்படி நடிக்கவே ஆசைப்படுகிறேன்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கும்கி தொடங்கி கொம்பன் திரைப்படம் வரை ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த லட்சுமிமேனன், தற்போது அஜீத்தின் 56வது திரைப்படத்தில் தங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் மறுத்தபோதும், எனக்கு ஹீரோயின் இமேஜ் தேவையில்லை. நான் நடிகையாக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அந்த திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அதையடுத்து, தங்கையாகி விட்ட நடிகையை எப்படி கதாநாயகியாக புக் பண்ணுவது என்று சிலர் தயங்கி நின்றபோது, நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தை இயக்கிய சக்திராஜன், ஜெயம்ரவியை வைத்து தான் இயக்கும் ஹாரர் திரைப்படத்துக்கு மீண்டும் கதாநாயகியாக அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். 

இந்த திரைப்படத்தில் லட்சுமிமேனன் ஹீரோயின் என்பதைவிட ஒரு மிரட்டலான வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .