George / 2015 ஜூலை 29 , பி.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்; கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா விரைவில் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வரிகள் இடம்பெற்றுள்ளதாக பெண்கள் அமைப்புகளிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
த்ரிஷா இல்லனா நயன்தாரா பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளன. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களில் ரோகேஷ் எழுதிய பிட்டு படம் டீ என்ற பாடலும் ஒன்று. ஜி.வி.பிரகாஷ்குமாரும் இயக்குநரும் இணைந்து பாடியுள்ள இந்தப்பாடல்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
பிட்டு படம் டீ என்று தொடங்கும் அந்தப்பாடலில நான் உனக்கு பேய்ப்படம்.. நீ எனக்கு பிட்டு படம்.. என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளது. நாயகனான பிரகாஷ்குமார், கதாநாயகியைப்பார்த்து நீ எனக்கு பிட்டு படம்... அதாவது நீ எனக்கு ஆபாசப்படம் என்று சொல்வதுபோல் இப்பாடல் உள்ளது.
பிட்டுப் படம் என்பது ஆபாசப்படத்தைக் குறிக்கும் வார்த்தை என்பதால், ஒட்டுமொத்த பெண்களையும் இந்தப்பாடல் வரி ஆபாசமானவர்களாக சித்தரிப்பதாக ஆவேசம் அடைந்துள்ளனர் பெண்கள்.
இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு, பிட்டு படம் டீ என்ற இந்தப்பாடலைப்பாடி தெருவில் செல்லும் பெண்களைப்பார்த்து நீ எனக்கு பிட்டுப்படம் என்று ஆண்கள் கேலி செய்வார்கள். எனவே த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திலிருந்து இந்தப்பாடலை உடனடியாய் நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து கடும் கண்டனத்தை பெண்கள் பதிவு செய்து வருகின்றனர். அது மட்டுமல்ல, த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்திலிருந்து இந்தப்பாடலை உடனடியாய் நீக்க வலியுறுத்தி தணிக்கைக்குழு அதிகாரிக்கும் புகார் அனுப்ப உள்ளனர். தணிக்கை அதிகாரியாக தற்போது பெண் அதிகாரி இருப்பதால் அந்த ஆபாசப்பாடலை நீக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புகின்றனர்.
35 minute ago
38 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
50 minute ago