2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

நித்தியாவின் ஏமாற்றம்

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிரத்னம் திரைப்படத்தில் நடித்து விட்டதால் மெகா ஹீரோக்களின் திரைப்படவாய்பபுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நித்யாவுக்கு தற்போது சுமாரான ஹீரோக்களின் திரைப்பட வாய்ப்பு மாத்திரம் கிடைப்பது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாம். 

சித்தார்த் - ப்ரியா ஆனந்த் நடித்த நூற்றென்பது திரைப்படத்தின மூலம் தமிழுக்கு வந்த நித்யாமேனன். அதையடுத்து நானி நடித்த வெப்பம் திரைப்படத்திலும் நடித்தார். இந்த திரைப்படங்களில் ஓரளவு நடித்திருந்த நித்யா, அதன்பிறகு கோலிவூட் இயக்குநர்களின் கவனத்தில் நின்றபோதும், அவரது உயரம் மற்றும் அவர் போடும் கண்டிசன்களால் அவரை நெருங்காமல் விலகியே நின்றனர்.

இந்தநிலையில்தான், 22 பீமேல் கோட்டையம் மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற திரைப்படத்தில் அதிரடியான ஒரு கதாபாத்திரத்தில் நித்யாமேனனை நடிக்க வைத்தார் ஸ்ரீப்ரியா.

அதையடுத்து காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி திரைப்படங்களில் சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார் நித்யா.

ஆனால், அதன்பிறகு அவரை தேடி சென்றதெல்லாமே பட்ஜெட் ஹீரோக்களின் திரைப்படங்கள்தானாம். மணிரத்னம் திரைப்படத்தில் நடித்து விட்டதால் மெகா ஹீரோக்களின் திரைப்படவாய்பபுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நித்யாவுக்கு அது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாம். 

அதனால், நான் எதிர்பார்க்கிற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் அல்லது ஹீரோயினியை மையப்படுத்தும் கதைகள் வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன். இல்லையேல் அதுவரைக்கும் காத்திருப்பேன் என்று கூறிவிட்டு, மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நித்யாமேனன்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .