2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

நயனின் ஆசை

George   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரிந்து விழந்த தனது டோலிவூட் மார்க்கெட்டை தூக்கிநிறுத்தி மீண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறாராம் நயன்தாரா. 

கோலிவூட்டின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, தெலுங்கு திரையுலகிலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக சுற்றிவந்தார். ஆனால், தற்போது டோலிவூட்டில் அவரது மார்க்கெட் நிலைமை சரியில்லை என்று கூறப்படுகின்றது.

தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில், அவர் வெங்கடேஷ் ஜோடியாக காதலை மையமாக கொண்ட திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படம் தெலுங்கில் தனது மார்க்கெட் தூக்கி நிறுத்தும் என்று நம்பும் நயன், இது  கைகொடுத்தால் கோலிவூட்டை போன்றே டோலிவூட்டிலும் ராணியாக வலம் வர விரும்புகிறாராம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .