2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இறங்கிவந்த இனியா

George   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதாநாயகியாக இனியாவால் ஒரளவுதான் சினிமாவில் வெற்றிபெறமுடிந்தது. இதனையடுத்து, கிடைக்கிற கேரக்டர்களில் நடிப்பது என தீர்மானித்துவிட்டார்.

அப்படி அவர் ரூட்டை மாற்றியதும் ஜித்தன்-2, கரையோரம், வைகை எக்ஸ்பிரஸ், காதல் சொல்ல நேரம் இல்லை என தமிழில் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார். அதுமட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் தற்போது கணிசமான திரைப்படங்களை கைப்பற்றியிருக்கிறார் இனியா.

இதில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நீத்து சந்திரா, சுஜா வாருணி, கோமல் சர்மா ஆகியோருடன் இன்னொரு நாயகியாக இனியாவும் நடிக்கிறார். 

ஆனால், இவருக்கு ஆர்கேவுடன் டூயட் பாடும் கேரக்டர் இல்லையாம். கதைப்படி நடிகையாகவே நடித்திருக்கும் இனியா, மதுரையில் நடக்கும் ஒரு படப்பிடிப்புக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பாராம். அப்போது அங்கு ஒரு சிக்கலில் அவர் சிக்கிக்கொள்வாராம். 

அதையடுத்து, பொலிஸ் அதிகாரியான ஆர்கே அவரை காப்பாற்றும் அதிரடி முயற்சிகளில் இறங்குவாராம். இந்த கேரக்டருக்கு முதலில் வேறொரு நடிகைதான் ஒப்பந்தமாகியிருந்தார். கேரளாவில் ஒரு மலையாள படப்பிடிப்பில் இருந்தபோது எதேச்சையாக ஷாஜி கைலாஷை சந்தித்ததையடுத்து அந்த கேரக்டர் இனியாவுக்கு கிடைத்ததாம். அதோடு அவருக்கான காட்சிகளையும் அதிகமாக்கியுள்ளனராம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .