2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

அசினுக்கு டும்.. டும்...

George   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து, இப்போது பொலிவூட் திரைப்படங்களில் மட்டுமே நடிக்கும் நடிகை அசினுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. 

மலையாள திரையுலகில் இருந்து கோலிவூட்டுக்கு வந்த நடிகை அசின், தமிழ்த்திரையுலகில் விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 

முன்னணி நடிகையாக இருந்த காலத்திலேயே, இலங்கையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களின் எதிர்ப்புக்கு ஆளானார். பின் பொலிவூட் மோகம் அவரை தொற்றிக்கொண்டது. இதனையடுத்து சல்மான் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்தார். 

ஆனால், அந்த திரைப்படங்கள் அவருக்கு வெற்றிகரமாக அமையவில்லை. இதனையடுத்து, சில காலம் ஒதுங்கியிருந்தார். இதனிடையே, அபிஷேக் பச்சன், ரிஷி கபூர் நடிப்பிலான ஆல் இஸ் வெல் திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகத்துக்கு வந்துள்ளார். 

இந்நிலையில், ஆல் இஸ் வெல் திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, அசின் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல் இஸ் வெல் திரைப்படத்தில், குடும்பத்தலைவி கேரக்டரில் நடித்த அசின், ராகுல் சர்மாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதன் மூலம், நிஜ வாழ்க்கையிலும் குடும்பத்தலைவி ஆக இருக்கிறார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .